சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதி:-

            இ- பேர்டு தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வன கோட்டத்தில் பணியாளர்களுக்கு வன உயிரின இந்திய நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் ஆளில்லா விமானத்தின் மூலம் பாதுகாப்பினை மேம்படுத்துவது குறித்து வகுப்புகள் எடுக்கப்பட்டது.

ரயில்வே ஊழியருக்கான புதிய செயலி உருவாக்கம்:-

            இந்திய ரயில்வே மொத்தம் 11.19 லட்சத்துக்கும் மேல் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
            ரயில்வே ஊழியருக்கு பணிக்கு சேர்ந்த நாள் பதவி உயர்வு விருதுகள் பெற்றது பணியிடமாற்றம் விடுப்பு மற்றும் பயிற்சி ஓய்வுகால பலன்கள் ஓய்வூதியம் போன்ற தகவல்களை உடனுக்குடன் பெரும் வகையில் மத்திய ரயில்வே தகவல் மையம் மூலம் புதியதாக எச் ஆர் எம் எஸ் (HRMS) என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர் பா சிவந்தி ஆதித்தனார்:-

திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன் பட்டினம் கிராமத்தில் ரூபாய் ஒரு கோடியே 34 லட்சம் 28 ஆயிரம் மதிப்பில்அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கட்டப்பட்டுள்ள பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறந்து வைத்து முதலமைச்சர் உரையாற்றினர்.
             தினத்தந்தி நாளிதழ் நிர்வாகப் பொறுப்பை 1959இல் ஏற்ற பா சிவந்தி ஆதித்தனார் அப்போது மூன்று இடங்களில் இருந்து வெளியான நாளிதழை 15 பதிப்புகளைக் கொண்டதாக வளர்த்தார் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர் ஆவார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராகவும், 1987இல் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராகவும் ஆசிய ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவராகவும் இருந்தார் மற்றும் திருச்செந்தூர் பகுதியில் பல கல்வி நிறுவனங்களை நிறுவி ஏழைகள் கல்வி கற்க வழிவகை செய்தார்.
இலக்கியம் கல்வித்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக 2008 இல் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவித்தது.பத்திரிகை விளையாட்டு கல்வி தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாக திகழ்ந்தவர் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார்.

தேச பாதுகாப்புக்காக சி ஐ ஏ எஸ் எஸ் வீரர்கள்:-

            ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு 80 பெண்கள் உட்பட 1160 துணை உதவி ஆய்வாளர் பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு 80 பெண்கள் உட்பட 1160 துணை உதவி ஆய்வாளர் பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது.

 பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் ரூபாய் 50,000 கோடி பட்டுவாடா:-
            பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி அறிமுகம் செய்தார் இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6000 நிதி உதவி வழங்கப்படுகிறது இந்த தொகை மூன்று தவணைகளாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
            இந்தத் திட்டம் துவங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பயிர் சாகுபடி மற்றும் வீட்டு செலவுக்கு உதவும் வகையில் இந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது இதன் மூலம் விவசாயிகளின் கடன்கள் பிரச்சினைகளிலிருந்து சிக்குவது குறையும் என்று கருதுகிறது. 8.46 கோடி விவசாயக் குடும்பங்கள் பயன் அடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

புவியியல் துறை திட்டவட்ட மறுப்பு உத்தரபிரதேசத்தில் தங்கம்:-

            உத்தரப் பிரதேச அரசின் தகவல்களை இந்திய புவியியல் துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த துறையின் பொது நிர்வாக இயக்குனர் ஸ்ரீதர், பி டி ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது மாவட்ட மலைப்பகுதியில் 52806.25 டன் தனிமங்கள் உள்ளன. இதில் ஒரு டன்னுக்கு 3.03 கிராம் தங்கம் கிடைக்கும். அதன்படி துறைமுக 106 கிலோ தங்கம் கிடைக்கலாம். ஆயிரத்து 300 டன் தங்கம் கிடைக்கும் என்று வெளியான தகவல் தவறானவை என்று அவர் கூறினார்.
            உலகில் அதிக அளவில் தங்கம் வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. உலக தங்க கவுன்சில் இன் புள்ளிவிவரத்தின்படி அமெரிக்கா வில் 8133 டன் தங்கம் உள்ளது.
இரண்டாமிடத்தில் 3366 டன் ஜெர்மனியிடம் உள்ளது.
இந்தியா 625 டன் தங்கம் மட்டுமே கையிருப்பு டன் 8 வது இடத்தில் உள்ளது.

ஆசிய மல்யுத்தம்:-

          57 கிலோ பிரிவில் கவ்ரவ் 5-7 என்ற புள்ளி கணக்கில் வெள்ளி வென்றார். 97 கிலோ பிரிவில் இந்தியாவின் சத்திய வர்த் கடியன் 0-10 வெள்ளி வென்றார்.

 அங்கேரி ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி கலப்பு இரட்டையர் பிரிவு:-

            இந்தியாவின் சரத் கமல் – மணிகா பத்ரா இணை வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

தில்லையாடி வள்ளியம்மை 106 ஆவது நினைவு தினம்:-

            தில்லையாடியில் இருந்து தென்னாப்பிரிக்கா நாட்டுக்குச் சென்று வசித்து வந்த முனுசாமி முதலியார் மங்கலம் தம்பதிக்கு 1898 ஆம் ஆண்டு மகளாக பிறந்தவர் வள்ளியம்மை.
இவன் தென்னாப்பிரிக்காவில் காந்தி நடத்திய போராட்டங்களில் தனது பதினைந்தாவது வயதிலேயே பங்கேற்று, 1913 ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தனது தாயாருடன் கைது செய்யப்பட்டார். மாரிட்ஸ்பேர்க் சிறை வாசம் அவரை கடுமையான நோய்க்கு உள்ளாக்கியது இதனால் உடல் நலம் குன்றிய வள்ளியம்மை 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி தனது 16 ஆவது வயதில் காலமானார்.

Daily Current affairs in tamil for Tnpsc. Tnpsc Group1, Gr 2, Gr 4

One Reply to “தினசரி முக்கிய நிகழ்வுகள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *