அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை ரூபாய் நாள் ஆயிரத்துக்கு அம்மா பிளாட்டினம் பிளஸ் திட்டம்:-

 • சென்னை அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ4000/-   அம்மா  பிளாட்டினம் பரிசோதனை ஓரிரு வாரத்தில் அறிமுகம் செய்யப்பட  உள்ளது என்று மருத்துவமனை தொடர்பு அதிகாரி டாக்டர் ஆனந்தகுமார்  தெரிவித்தார்.

Tnpsc coaching class in salem – S Seven Academy

அரசு நிதி ஆண்டுக்கு ஏற்றார்போல் ரிசர்வ் வங்கி நிதி ஆண்டு மாற்றம்:-           

 • வருடாந்திர பணவீக்க அளவை கட்டுக்குள் வைக்கும் விதமாக அதற்கான நிதிக்கொள்கை குழு கடந்த 2016ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆறு நபர்கள் அடங்கிய குழு தான் ரெப்போ விகிதம் தொடர்பான முடிவுகளை எடுத்து வருகிறது.
 • 2016 அக்டோபர் மாதம் இக்குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.  வருடாந்திர  பணவீக்கத்தை மார்ச் 31 2020 வரையில் அதிகபட்ச அளவாக  6 சதவீதமும் குறைந்த அளவாக 2 சதவீதமும் கட்டுக்குள் வைக்கவேண்டும் என்று அப்போது இலக்கு வைக்கப்பட்டது.
  தற்போது ரிசர்வ் வங்கிக்கான நிதியாண்டு ஜூலி 1 இல் ஆரம்பித்து ஜூன் 30இல் முடிகிறது. மேலும் இனிமேல் மத்திய நிதி ஆண்டின் படி  ரிசர்வ் வங்கியின்  நிதி ஆண்டும் மாற்றப்பட உள்ளது.
 • அதன்படி வரும் ஜூலை ஒன்றில் ரிசர்வ் வங்கியின் நிதி ஆண்டு தொடங்கி மார்ச் 31ல் முடியும் அதன் பிறகு அதாவது 2021ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி நிதி ஆண்டு ஏப்ரல் 1 முதல் தொடங்கி மார்ச் 31 வரை முடியும்.

Tnpsc coaching center in salem – S Seven Academy Salem

சக்தி என்ற திட்டம் தமிழகத்தில் முதல்கட்டமாக 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

 • சென்னை சுயஉதவிக் குழுக்களின் வங்கிக்கணக்குகள் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகள் குறித்த விவரங்களை மின்னணுமயமாக்கி பராமரிப்பதற்குவசதியாக சக்தி என்ற திட்டம் தமிழகத்தில் முதல்கட்டமாக 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. விரைவில் இத்திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
 • சுயஉதவிக் குழுக்களின் வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகள் குறித்த விவரங்களை மின்னணு மயமாக்கி பராமரிப்பதற்கு வசதியாக சக்தி என்ற திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர்க் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் துலே ஆகிய 2 நகரங்களில் முன்னோடித் திட்டமாக தொடங்கப்பட்டது. பின்னர், 2016-ம் ஆண்டு இத்திட்டம் மேலும் 23 மாவட்டங்களுக்கும், 2017-ம் ஆண்டு 75 மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டது.
 • தற்போது, நாடு முழுவதும் 22 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 200 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், 4.5 லட்சம் சுயஉதவிக்குழுக்களின் அனைத்து விவரங்களும் மின்னணுமயம் ஆக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழைகள் 54 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
 • தமிழகத்தில் சக்தி திட்டம், தமிழக அரசு மகளிர் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து முதல்கட்டமாக திருவண்ணாமலை, விருதுநகர், நாமக்கல், நாகை மாவட்டங்களில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

தினசரி முக்கிய நிகழ்வுகள் 25 Feb 2020

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்:-

 • இத்திட்டத்தையொட்டி (பிப். 24) அனைத்துப்பள்ளிகளிலும் மாணவர்கள் அது தொடர்பான உறுதிமொழி ஏற்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 • பெண் குழந்தைகளுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய சேவையை நினைவுகூரும் வகையில் அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதியை ஆண்டுதோறும் மாநில பெண் குழந்தை கள் பாதுகாப்பு நாளாகக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

TNPSC Exam coaching institute in salem – S Seven Academy Salem

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர் வாணையத்தின் தலைவராக டி.ஜி.பி. சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்..

நிலக்கரி இறக்குமதி 15 சதவீதம் சரிவு:-

 • நாட்டில் முக்கியமான12 துறை        முகங்கள் மூலம் அனல்மின் உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் அளவு கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி மாதம் வரையிலான கால கட்டத்தில் 15 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு இந்த தகவலை தெரிவித்துள்ளது.
 • கடந்த ஏப்ரல் முதல் ஜனவரிவரையிலான கால கட்டத்தில் மொத்தம் 74.60 மில்லியன்டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 87.74 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி ஆகியுள்ளது.
 • இதன் மூலம் இறக்குமதி 15 சதவீதம் அளவுக்கு சரிந்தது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் உருக்கு ஆலைகள் உள்ளிட்ட பிற பயன்பாட்டுக்கான நிலக்கரி இறக்குமதி 1.10 சதவீதம் அளவுக்கு அதிகரித்து 47.08 மில்லியன் டன்னாக உள்ளது. இதுவே முந்தைய காலகட்டத்தில் 46.57 மில்லியன் டன்னாக இருந்தது.
 • இந்தியாவில் மின்உற்பத்தியில் 70 சதவீதம் அனல்மின் நிலையங்கள் மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றன. இதில் நிலக்கரி முக்கியப் பங்கு வகித்துவருகிறது. சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக நிலக்கரி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஹங்கேரி ஓபன் டேபிள் டென்னிஸ் சரத் கமல்சத்யனுக்கு வெள்ளிப் பதக்கம்:-

 • ஹங்கேரி பென் டேபிள் டென்னிஸ் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத்கமல்சத்யன் ஞான சேகரன் இணை அபாரமாக ஆடிவெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

கலப்பு இரட்டையர் பிரிவில் சரத்கமல்மனிகா பத்ரா இணை வெண்கலப்பதக்கம் வென்றிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *